September 9, 2026
தேசியம்
செய்திகள்

Scarborough-Rouge Park இடைத் தேர்தலில் நான்கு தமிழர்கள் உட்பட மொத்தம் 20 வேட்பாளர்கள்

Scarborough-Rouge Park தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நான்கு தமிழர்கள் உட்பட மொத்தம் 20 வேட்பாளர்களுக்கு நகரம் அனுமதி அளித்துள்ளது.
வெற்றிடமாகியுள்ள நகரசபை உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தலுக்கு 20 வேட்பாளர்களுக்கு நகரம் அனுமதி அளித்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த இடைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (15) பிற்பகல் 2 மணியுடன்  நிறைவடைந்தது.
Scarborough-Rouge Park தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் இந்த தொகுதி வெற்றிடமானது.
இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 20 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களில் நான்கு தமிழர்களும் அடங்குகின்றனர்.
நீதன் சான், அனு ஸ்ரீஸ்கந்தராஜா, சியான் சின்னராஜா, அனிதா ஆனந்தராஜன் ஆகிய தமிழர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தவிரவும் Shawn  Allen, Walter Alvarez-Bardales, Darrell Brown, Kevin Cheatley, Zia Choudhary,  Ashan Fernando, Jamil Kerr, Reza Khoshdel, Donna LaRush,  Huy Lieu, Brian Matthews, Jose Moreno Garcia,  Zakir Patel, Dianna Robinson, Gregory Rodriguez,  Shemar Shirley ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்த தமிழரான ராஜ் தவரட்ணசிங்கம் தனது வேட்புமனுவை  இறுதி நேரத்தில் மீளப் பெற்றுள்ளார்.
இடைத் தேர்தல் வாக்களிப்பு September 29-ஆம் திகதியும், முன்கூட்டிய வாக்களிப்பு September 20 , 21-ஆம் திகதிகளிலும் நடைபெறும்.
இந்த இடைத்தேர்தல் $550,000 செலவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

Related posts

AstraZeneca தடுப்பூசிகளை 65வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க கனடா முடிவு!

Gaya Raja

Ontario Liberal தலைமையில் Etobicoke சட்டமன்ற உறுப்பினர் ஆர்வம்?

Lankathas Pathmanathan

Saskatchewan மாகாண முதல்வரிடன் மன்னிப்பு கோரிய பிரதமர் அலுவலகம்

Lankathas Pathmanathan

Leave a Comment