September 30, 2026
தேசியம்
செய்திகள்

Markham இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை கைவிட்ட தமிழர்!

Markham நகரசபையின் ஏழாம் வட்டார இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது எண்ணத்தை தமிழரான வால் புருஷோத்தமன் கைவிட்டுள்ளார்.

இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை மூன்றாவது தமிழராக வால் புருஷோத்தமன் தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் இறுதி நேரத்தில் அவர் தனது வேட்பு மனுவை மீளப் பெற்றுள்ளார்.

Pickering–Brooklin நாடாளுமன்ற உறுப்பினராக ஜுனிதா நாதன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிடமாக உள்ள ஏழாம் வட்டார நகரசபை உறுப்பினர் இடத்தை நிரப்ப இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் இரண்டு தமிழர்கள் உட்பட மொத்தம் எட்டு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த இடைத் தேர்தலில் போட்டியிட கிள்ளி செல்லையா, ஆரணி முருகானந்தன் ஆகிய தமிழர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த இடைத் தேர்தல் வாக்களிப்பு September 29-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

முன்கூட்டிய வாக்களிப்பு September 26, 27, 28-ஆம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைத் தேர்தலை நடத்துவதற்கான செலவு $300,000 என மதிப்பிடப்படுகிறது.

Related posts

தனிமைப்படுத்தப்படும் பிரதமர் Trudeau!

Lankathas Pathmanathan

Pharmacare சட்ட மூலத்திற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்

Lankathas Pathmanathan

அடுத்த சில வாரங்களுக்குள் கனடாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும்: Donald Trump நம்பிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment