தேசியம்
செய்திகள்

Pierre Poilievre போட்டியிடும் இடைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள்!

Pierre Poilievre போட்டியிடும் இடைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Alberta மாகாணத்தின் Battle River-Crowfoot தொகுதிக்கான இடைத் தேர்தல் August 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த இடைத் தேர்தலில் Conservative தலைவர் Pierre Poilievre போட்டியிடுகின்றார்.

நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை வெற்றி பெறும் நம்பிக்கையுடன் இந்த இடைத் தேர்தலில் Pierre Poilievre போட்டியிடவுள்ளார்.

April மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre தனது சொந்தத் தொகுதியில் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் அவருக்கு நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் Battle River-Crowfoot தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Damien Kurek தனது பதவியில் இருந்து விலகினார்.

திங்கட்கிழமை (28) காலை நிலவரப்படி, Battle River-Crowfoot தொகுதியில் 209 வேட்பாளர்கள் போட்டியிடுவதை கனடிய தேர்தல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதில் அதிக எண்ணிக்கை வேட்பாளர்கள் தேர்தல் சீர்திருத்த குழுவான நீண்ட வாக்கு சீட்டு குழு (Longest Ballot Committee) என அழைக்கப்படும் ஒரு போராட்டக் குழுவுடன் தொடர்புடையவர்கள் என தெரியவருகிறது.

திங்கட்கிழமை (28) இந்த இடைத் தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிட பதிவு செய்வதற்கான இறுதி நாளாகும்.

இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுவோரின் முழுமையான உத்தியோகபூர்வ பட்டியல் புதன்கிழமை (30) வெளியாகும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த இடைத் தேர்தல் வாக்களிப்பு August 18 ஆம் திகதி நடைபெறுகிறது.

இந்த இடைத் தேர்தலில் Conservative தலைவர் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் உள்ள போதிலும் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் காரணமாக தேர்தல் முடிவுகள் வெளியாக நீண்ட நேரம் எடுக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

Related posts

தொடர் கொலையாளி Robert Pickton சிறையில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

Lankathas Pathmanathan

ஒருமுறை பயன்படுத்தும் plastic மீதான தடை அமுலுக்கு வந்தது

Lankathas Pathmanathan

கனடா முழுவதும் பல பகுதிகளில் Omicron ஆதிக்கம்!

Lankathas Pathmanathan

Leave a Comment