கனடாவின் தேசிய Holocaust நினைவுச் சின்னம் சேதப்படுத்தப்பட்டது.
தலைநகர் Ottawa-வில் அமைந்துள்ள தேசிய Holocaust நினைவுச் சின்னம் இரவோடு இரவாக சேதப்படுத்தப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (09) காலை சிவப்பு வண்ண பூச்சுடன் சிதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட நினைவுச் சின்னத்தை பராமரிப்பு குழுவினர் சுத்தம் செய்தனர்.
“Feed Me” என்ற வாசகம் குறிப்பிட்ட நினைவுச் சின்னத்தில் வரையப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
நினைவுச் சின்னம் சிதைக்கப்பட்டது குறித்து Ottawa யூத கூட்டமைப்பின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான Adam Silver தனது கண்டனத்தை தெரிவித்தார்.
இது Holocaust-டில் கொல்லப்பட்ட ஆறு மில்லியன் யூதர்கள் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்களின் நினைவை அவமதிக்கும் செயலாகும் என அவர் கூறினார்.
நினைவுச் சின்னம் சிதைக்கப்பட்டிருப்பது “அதிர்ச்சியளிப்பதானது” என Ottawa நகர முதல்வர் Mark Sutcliffe கூறினார்.
இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக Ottawa காவல்துறை தெரிவித்தது.