கனடாவுக்கும் சீனாவுக்கு இடையில் நிரந்தர தொடர்புகளை ஏற்படுத்த கனடிய பிரதமர் உறுதியளித்தார்.
சீனாவின் முதல்வர் Li Qiang உடன் வியாழக்கிழமை (05) நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவை பிரதமர் Mark Carney அறிவித்தார்.
பிரதமரான பின்னர் சீனத் தலைமையுடன் Mark Carney நடத்திய முதல் உரையாடல் இதுவாகும்.
Fentanyl நெருக்கடி, இரு நாடுகளுக்கிடையில் வர்த்தகம் குறித்தும் இந்த உரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
சீனாவுக்கும் கனடாவுக்கு இடையிலான அண்மைய அரசியல், வர்த்தக மோதல்களிடையே இரு நாட்டின் தலைவர்களிடையேயான உரையாடல் ஒரு பிரதான நகர்வாக நோக்கப்படுகிறது.
விவசாயம், வேளாண் உணவுப் பொருட்களைப் பாதிக்கும் வர்த்தக சவால்கள் குறித்தும் இந்த உரையாடலில் பிரதமர் Mark Carney கருத்துத் தெரிவித்தார்.