தேசியம்
செய்திகள்

பிரதமர் பதவிக்கு போட்டியிடும் எண்ணத்தை வெள்ளி அறிவிக்கவுள்ள Chrystia Freeland?

Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் ஈடுபடும் தனது எண்ணத்தை முன்னாள் துணை பிரதமர் Chrystia Freeland வெள்ளிக்கிழமை (17) அறிவிக்கவுள்ளார்.
அமைச்சரவையில் இருந்து விலகிய ஒரு மாதத்தின் பின்னர், முன்னாள் நிதியமைச்சரும் துணைப் பிரதமருமான Chrystia Freeland பிரதமர் Justin Trudeauவின் பதவிக்கான தனது பிரச்சாரத்தை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.
கட்சியின் தலைமைப் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியலில் நான்கு வேட்பாளர்கள் தமது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
இவர்களில் முன்னாள் கனடிய மத்திய வங்கி, இங்கிலாந்தின் மத்திய வங்கியின் ஆளுநர் Mark Carney ஒருவராவார்.
இந்த நிலையில் அவருக்கு எதிரான பிரதான வேட்பாளராக கருதப்படும் Chrystia Freeland வார இறுதியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார்.
Liberal கட்சியின் புதிய தலைமையை ஏற்பவர் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது.
Liberal கட்சியின் அடுத்த தலைவரும், கனடாவின் அடுத்த பிரதமரும் March 9 தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

COVID-19 உதவிக் கொடுப்பனவுகளை நீடிக்கும் சமஷ்டி அரசின் திட்டம் – Federal Government proposes extending of COVID-19 supports

Lankathas Pathmanathan

Toronto பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து முகாமை அகற்ற தடை உத்தரவு

Lankathas Pathmanathan

Ontario பாடசாலைகள் மீண்டும் நேரடி கல்விக்கு திறக்கும் திகதி அறிவிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment