தேசியம்
செய்திகள்

Manitoba, Saskatchewan, Alberta மாகாணங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

Manitoba, Saskatchewan, Alberta மாகாணங்களில் காட்டுத்தீ எரிந்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

Manitoba மாகாணம் முழுவதும் புதன்கிழமை (28) அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது.

17,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக Manitoba முதல்வர் Wab Kinew புதன் மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த அவசரகால நிலையை எதிர்கொள்வது குறித்து பிரதமர் Mark Carney, Manitoba முதல்வருடன் தொலைபேசியில்  உரையாடினார்.

மத்திய அரசாங்கம் தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக இந்த உரையாடலில் பிரதமர் உறுதியளித்தார்.

வடக்கு Saskatchewan-னில், அதிகரித்து வரும் காட்டுத் தீயை எதிர்கொள்ளும் வகையில் மூன்று முதற்குடி சமூகங்கள் அவசரகால நிலையை அறிவித்தன.

Alberta மாகாணத்தின் சில பகுதிகளில் புதன் இரவும், வியாழக்கிழமை (29) அதிகாலையும் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

2024 Paris Olympics: இருபது பதக்கத்தை அண்மிக்கும் கனடா

Lankathas Pathmanathan

Yukon தேர்தலில் Yukon கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி

Lankathas Pathmanathan

Patrick Brownக்கு ஆதரவு தெரிவித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை விலக்கியுள்ளனர்!

Lankathas Pathmanathan

Leave a Comment