Tariffs குறித்த அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பை கனடிய பிரதமர் வரவேற்றார்.
பெரும்பாலான நாடுகள் மீதான அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-பின் பரந்த அளவிலான வரிகளை இரத்து செய்ய அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சர்வதேச பொருளாதார அவசர அதிகாரச் சட்டத்தை பயன்படுத்தி பெரும்பாலான நாடுளுக்கு எதிராக வரிகளை விதிக்க Donald Trump-பிற்கு அதிகாரம் இல்லை என அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் புதன்கிழமை (28) தீர்ப்பளித்தது.
இந்த முடிவை வரவேற்பதாக கனடிய பிரதமர் Mark Carney கூறினார்.
கனடா தனது வர்த்தக உறவுகளை தொடர்ந்து பன்முகப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக Donald Trump நிர்வாகம் மேல்முறையீட்டை தாக்கல் செய்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
