Ontario முதல்வர் Doug Ford உட்பட மாகாணசபை உறுப்பினர்கள் சம்பள உயர்வை பெறுகின்றனர்.
Ontario மாகாணசபை உறுப்பினர்கள் $41 ஆயிரம் சம்பள உயர்வை பெறுகின்றனர்.
பல தசாப்தங்களில் முதல் முறையாக ஓய்வூதியத் திட்டத்தில் பங்கேற்கவும் அவர்கள் தகுதி பெறுகின்றனர்.
2009 முதல் மாகாணசபை உறுப்பினர்களுக்கான சம்பளம் $116,500 ஆக உள்ளது.
ஆனால் இவர்களுக்கான சம்பள உயர்வை கோரும் சட்டமூலம் வியாழக்கிழமை (29) மாகாண சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 75 சதவீதத்தை மாகாணசபை உறுப்பினர்களுக்கான ஊதியமாக நிர்ணயிக்க இந்த சட்டமூலம் கோருகிறது.
இதன் விளைவாக மாகாணசபை உறுப்பினர்களுக்கான சம்பளம் 35 சதவீதம் அதிகரித்து $157,350-ஆக அதிகரிக்கும் நிலை தோன்றியுள்ளது.
இதன் மூலம் முதல்வரின் சம்பளம் $208,974-இலிருந்து $282,129-ஆக உயரும்.
அதேநேரத்தில் அமைச்சர்களின் சம்பளம் $165,851-இலிருந்து $223,909-ஆக உயர்த்தப்படும்.
உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைவருக்கு $180,866-இலிருந்து சம்பளம் $244,207-ஆக அதிகரிக்கும்.
இந்த சம்பள உயர்வுகள் 2025-2026 ஆம் ஆண்டில் Ontario-வின் பொது ஊழியர்களின் சம்பளச் செலவுகளை $6 மில்லியனினால் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
