British Colombia மாகாணத்தில் முன்னாள் வதிவிட பாடசாலை குடியிருப்பு பகுதியில் அடையாளம் காணப்படாத 40 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
முன்னாள் St. Augustine வதிவிட பாடசாலை குடியிருப்பு பகுதியில் இந்த கல்லறைகள் அடையாளம் காணப்பட்டன.
Shishalh முதற்குடியினர் பகுதியில் தரையில் ஊடுருவக்கூடிய radarகள் மூலம் இந்த குழந்தைகளின் அடையாளம் காணப்படாத கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த கல்லறைகளை கண்டுபிடிக்க Saskatchewan பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக Shishalh முதற்குடியின சமூகம் தெரிவித்தது
இந்த வதிவிட பாடசாலை குடியிருப்பு பகுதியில் இருக்கக்கூடிய காணாமல் போன குழந்தைகள் அனைவரின் கல்லறைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என ஒரு அறிக்கையில் Shishalh முதற்குடியின சமூகம் தெரிவிக்கிறது