September 4, 2026
தேசியம்
செய்திகள்

2024-ஆம் ஆண்டில் $187.8 மில்லியன் செலவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2024-ஆம் ஆண்டில் $187.8 மில்லியன் செலவிட்டுள்ளனர் என தெரியவருகிறது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரயாண செலவாக $32 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

இது 2023 ஆம் ஆண்டை விட $12.7 மில்லியன் அதிகமானதகும்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழியர்களின் ஊதியாதிக்கான $114.1 மில்லியன் தொகையும் அடங்குகிறது.

மூன்றாம் தரப்பு ஒப்பந்தங்களுக்கு $39.8 மில்லியன், விருந்தோம்பல் செலவுகளுக்கு $1.9 மில்லியன் ஆகியனவும் இதில் அடங்குகிறது.

2024-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சராசரியாக தலா $547,000 செலவிட்டனர்.

10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே $700,000-க்கும் அதிகமாக செலவு செய்தனர்.

இதில் நான்கு Conservative, மூன்று Liberal, இரண்டு NDP, ஒரு Bloc Québécois உறுப்பினர்களும் அடங்குகின்றனர்.

இவர்களில் அதிக செலவு செய்தவராக Bloc Québécois நாடாளுமன்ற உறுப்பினர் Kristina Michaud உள்ளார்.

இவர் மொத்தமாக $775,000 செலவு செய்துள்ளார்.

இதில்  வேறு எந்த நாடாளுமன்ற உறுப்பினரையும் விட அதிகமான பயணச் செலவான $328,000 அடங்குகிறது.

கட்சி அடிப்படையில், NDP ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு சராசரியாக $583,000 செலவிட்டுள்ளது.

Bloc Québécois $565,000, பசுமை கடசி $559,000, Conservative$556,000Liberal$532,000 என ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு சராசரியாக செலவிட்டுள்ளன்.

Related posts

Torontoவில் காணாமல் போயுள்ள தமிழ் பெண்

Lankathas Pathmanathan

நடைமுறைக்கு வந்த சீன விமானப் பயணிகளுக்கான விதிமுறை

Lankathas Pathmanathan

தொடர்ந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில்

Lankathas Pathmanathan

Leave a Comment