தேசியம்
செய்திகள்

புதிய அமைச்சரவை செவ்வாய் பதவியேற்பு

பிரதமர் Mark Carney தனது புதிய அமைச்சரவையை  செவ்வாய்க்கிழமை (13) அறிவிக்கவுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் வெற்றியடைந்த  Mark Carney தலைமையிலான Liberal கட்சியின் அமைச்சரவை செவ்வாயன்று பதவியேற்கவுள்ளது.

புதிய அமைச்சரவை பதவியேற்பை  ஆளுநர் நாயகம் அலுவலகம் உறுதிப்படுத்தியது.

தனது புதிய அமைச்சரவையில் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்த Mark Carney உறுதியளித்துள்ளார்.

ஆனாலும் தேர்தலின் முன்னர் அறிவித்த அமைச்சரவையில் அவர் மாற்றங்களை மேற்கொள்வாரா அல்லது, அதை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளாரா என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

கனடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் மூவர் வெற்றி பெற்றனர்.

இவர்களில் அனிதா ஆனந்த், ஹரி ஆனந்தசங்கரி ஆகியோருக்கு மீண்டும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய கனடா 10 மில்லியன் யூரோ செலுத்த வேண்டும்?

Lankathas Pathmanathan

உடனடி மருத்துவ விடுப்பில் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர் Kirsty Duncan

Lankathas Pathmanathan

London வாகனத் தாக்குதல் சந்தேக நபர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய கோரிக்கை

Gaya Raja

Leave a Comment