தேசியம்
செய்திகள்

நான்கு தொகுதிகளில் வாக்கு மீள் எண்ணிக்கை?

Ontario மாகாணத்தின் Windsor-Tecumseh-Lakeshore தொகுதியின் தேர்தல் வாக்குகள்  மீண்டும் எண்ணப்படவுள்ளன.

உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்தத் தொகுதியில் முன்னாள் Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Irek Kusmierczyk, Conservative வேட்பாளர்  Kathy Borrelli-இடம் 77 வாக்குகளால் தோல்வியடைந்தார்.

தேர்தல் தினத்தன்று வாக்குகள் எண்ணப்பட்ட போது இருவருக்கும் இடையிலான இடைவெளி 233 வாக்குகளாக இருந்தது.

இந்த நிலையில் சில வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருக்க கூடாது என Irek Kusmierczyk-சியின் சட்டத்தரணி Jeff Hewitt வாதிட்டார்.

கனடிய தேர்தல் திணைக்கள ஊழியர்கள் 536 வாக்குகளை நிராகரித்தனர் என Jeff Hewitt நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டத்தரணி Jeff Hewitt முன்வைத்த அனைத்து சாட்சியங்களையும் செவிமடுத்த நீதிபதி Ross Macfarlane, அனைத்து வாக்குகளையும் மீண்டும் எண்ண உத்தரவிட்டார்.

இந்த வாக்கு மீள் எண்ணிக்கை May 20-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் May 26 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்த முடிவு வெளியானது.

மொத்தம் நான்கு தொகுதிகளில் வாக்கு மீள் எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

Terra Nova, Nfld., Milton, Ont., Terrebonne, Que. ஆகிய தொகுதிகளிலும் வாக்கு மீள் எண்ணிக்கை நடைபெற உத்தரவிடப்படுள்ளது.

Related posts

குற்றம் சாட்டப்பட்ட இலங்கை போர்க் குற்றவாளியை உயர் ஸ்தானிகராக நியமிக்க முடியாது: கனடா

Gaya Raja

Quebec propane வெடிப்பு சம்பவத்தில் தொடர்ந்து மூவர் காணாமல் போயுள்ளனர்

Lankathas Pathmanathan

தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்?

Lankathas Pathmanathan

Leave a Comment