September 23, 2026
தேசியம்
செய்திகள்

நடுத்தர வர்க்க வரி குறைப்புக்கு முன்னுரிமை அளிக்கும் உத்தரவில் கையெழுத்திட்ட பிரதமர்

நடுத்தர வர்க்க வரி குறைப்புக்கு முன்னுரிமை அளிக்கும் உத்தரவில் கனடிய பிரதமர் கையெழுத்திட்டார்.

செவ்வாய்க்கிழமை (13) பதவியேற்ற புதிய அமைச்சரவையுடனான பிரதமரின் முதல் சந்திப்பு புதன்கிழமை (14) நடைபெற்றது.

இந்த சந்திப்பின் பின்னர், நடுத்தர வர்க்கத்தினருக்கான வாக்குறுதியளிக்கப்பட்ட வரி குறைப்புக்கு முன்னுரிமை அளிக்கும் உத்தரவில் Mark Carney கையெழுத்திட்டார்.

இந்த மாத இறுதியில் நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது முதலில் தாக்கல் செய்யப்பட வேண்டிய சட்டத்தைத் தயாரிக்குமாறு தனது அமைச்சர்களுக்கு அறிவுறுத்தும் ஒரு குறிப்பில் அவர் கையெழுத்திட்டார்.

சில கனடியர்களுக்கான தனிநபர் வருமான வரி விகிதத்தை ஒரு சதவீதம் குறைப்பதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது Mark Carney உறுதியளித்தார்.

இது சில குடும்பங்களுக்கு ஆண்டுக்கு $840 வரை சேமிக்கும் என புதிய நிதி அமைச்சர் François-Philippe Champagne கூறினார்.

இதை “மிகவும் முக்கியமான” ஒரு நடவடிக்கை என François-Philippe Champagne வர்ணித்தார்.

புதிய நாடாளுமன்ற அமர்வுகள் May 26-ஆம் திகதி ஆரம்பிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Conservative கட்சியின் மூன்றாவது தலைமைத்துவ விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை: Pierre Poilievre

Stanley Cup: இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெறும் சந்தர்ப்பத்தை மீண்டும் பெறும் Toronto Maple Leafs

தமிழ் இனப்படுகொலையை மறுபவர்களுக்கு கனடாவில் இடமில்லை: Patrick Brown

Lankathas Pathmanathan

Leave a Comment