September 8, 2026
தேசியம்
செய்திகள்

Terrebonne தொகுதியை மீண்டும் வெற்றி பெற்றது Liberal!

Québéc மாகாணத்தின் Terrebonne தொகுதியை Liberal கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்த தொகுதியை Liberal கட்சி வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

Liberal வேட்பாளர் Tatiana Auguste வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

பின்னர்  முன்னெடுக்கப்பட்ட தேர்தலுக்கு பின்னரான வாக்குகள் சரிபார்ப்பு செயல்முறையை தொடர்ந்து இந்தத் தொகுதியை Bloc Québécois வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Bloc Québécois வேட்பாளர் Nathalie Sinclair-Desgagné, Liberal வேட்பாளரை 44 வாக்குகளால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், இந்தத் தொகுதியில் மீள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்த வாரம் கனடாவின் தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

ஒரு தொகுதியின் வெற்றி பதிவான வாக்குகளில் 0.1 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் பொழுது, அங்கு மீள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது நடைமுறையாகும்.

இந்த நிலையில் Terrebonne தொகுதியின் மீள் வாக்கு எண்ணிக்கையில் அங்கு Liberal கட்சி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தெரியவருகிறது.

இந்த வெற்றி Liberal கட்சியின் மொத்த ஆசன எண்ணிக்கையை 170 ஆக அதிகரித்தது.

இது நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு  தேவையான ஆசன எண்ணிக்கைக்கு இரண்டு ஆசனங்கள் குறைவாகும்.

Bloc Québécois நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 21 ஆக குறைவடைந்தது.

நாடளாவிய ரீதியில் மீள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தொகுதிகளில் Terrebonne தொகுதியும் ஒன்றாகும்.

Milton East-Halton Hills தெற்கு, Terra Nova-The Peninsulas, Windsor-Tecumseh-Lakeshore தொகுதிகளிலும் வாக்கு மீள் எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

Terra Nova-The Peninsulas தொகுதியில் May 12, Milton East-Halton Hills தெற்கு தொகுதியில் May 13, Windsor-Tecumseh-Lakeshore தொகுதிகளிலும்  May 20 வாக்கு மீள் எண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவின் புதிய பிரதமர் யார்?

Lankathas Pathmanathan

தேர்தலில் வெளிநாட்டு அரசாங்கம் எனக்கு உதவவில்லை: நாடாளுமன்ற உறுப்பினர் Han Dong

Lankathas Pathmanathan

Alberta மாகாண தேர்தல் May 29!

Lankathas Pathmanathan

Leave a Comment