September 30, 2026
தேசியம்
செய்திகள்

கனடிய மத்திய வங்கி வட்டி விகிதக் குறைப்பை நிறுத்தும்?

கனடிய மத்திய வங்கி வட்டி விகிதக் குறைப்புகளை நிறுத்த அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய மத்திய வங்கி அதன் வட்டி விகிதக் குறைப்பு சுழற்சியை இந்த வாரம் இடைநிறுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகரித்து வரும் பணவீக்கம், பலவீனமான வேலை வாய்ப்பு சந்தை, அமெரிக்க ஜனாதிபதி வரி கட்டண அறிவித்தலில் இருந்து பின்வாங்கியது ஆகியவை மத்திய வங்கியின் முடிவின் காரணமாக அமையும் என எதிர்வு கூறப்படுகிறது.

அடுத்த வட்டி விகித அறிவிப்பை மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem புதன்கிழமை வெளியிடவுள்ளார்.

மத்திய வங்கி கடந்த 10 மாதங்களில் அதன் முக்கிய கடன் விகிதத்தை 225 அடிப்படை புள்ளிகளால் 2.75 சதவீதமாக குறைத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

சில மாகாணங்கள் பாடசாலைகளில் வாக்குச்சாவடிகளை அனுமதிக்காது!

Gaya Raja

வேலையற்றோர் விகிதம் மீண்டும் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

சட்டவிரோத துப்பாக்கிகள் குறித்த விசாரணையில் இரண்டு தமிழர்கள் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment