கனடாவின் COVID தொற்றின் எண்ணிக்கை அடுத்த வாரம் ஒரு மில்லியனை தாண்டும் நிலை தோன்றியுள்ளது.
கனடாவின் பொது சுகாதார நிறுவனம் நேற்று வெள்ளிக்கிழமை இந்தத் தகவலை வெளியிட்டது. கனடாவில் நாளாந்த தொற்றின் எண்ணிக்கை 12,000 ஆக அதிகரிக்கும் நிலை உள்ளதாக நேற்று வெளியான புதிய தேசிய பொது சுகாதார modelling தரவுகள் சுட்டிக்காட்டுகின்றது.
இரண்டு மாதமாக குறைவடைந்து வரும் தொற்றுக்களின் எண்ணிக்கை எதிர்வரும் வாரங்களில் வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகரித்து வரும் தொற்றின் புதிய திரிபுகள் இதற்கான காரணியாக சுட்டிக்காட்டப்படுகிறது.
தடுப்பூசி வழங்குதல் அதிகரித்தாலும் தொற்றின் பரவல் வேகத்தை தடுப்பூசிகளின் வழங்கல் சரி செய்ய முடியாது என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam நேற்று தெரிவித்தார்.