தேசியம்
செய்திகள்

கனடாவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியது

கனடாவில் நேற்று வியாழக்கிழமையுடன் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து  50 ஆயிரத்தை தாண்டியது.

நேற்று மாத்திரம் 5 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் கனடாவில் பதிவாகின. இவற்றில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் Ontarioவில் நேற்று வியாழக் கிழ மை அறிவிக்கப்பட்டன. January மாதத்தின் பின்னர் நேற்று முதல் தடவையாக Ontarioவில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகின.

Ontario சுகாதார அதிகாரிகள் 2,380 தொற்றுக்களையும் 17 மரணங்களையும் அறிவித் தனர். Ontario தவிர Quebecகில் 945, British Columbiaவில் 800, Albertaவில் 764, Saskatche wanனில் 168, Manitobaவில் 111, New Brunswickகில் 30, Nova Scotiaவில் 3, Prince Edward Islandடில் 1 என நேற்று தொற்றுக்கள் பதிவாகின. கனடாவில் நேற்று மொத்தம்  5,202 புதிய தொற்றுக்கள் பதிவாகின. British Columbiaவில் 5, Quebecகில் 4, Albertaவில் 3, Saskatchewanனில் 2 என மரணங்களும் அறிவிக்கப்பட்டன.

நேற்று வியாழக்கிழமையுடன் கனடாவில் 9 இலட்சத்து  51 ஆயிரத்து  562 தொற்று களும் 22 ஆயிரத்து  790 மரணங்களும் அறிவிக்கப்பட்டதுடன்  8 இலட்சத்து  89 ஆயிரத்து 850 பேர் சுகமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழர் பலியான சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

அரசியல் இலாபத்திற்காக உண்மைகளைத் திரிப்பது பொறுப்பான தலைமை அல்ல: Trudeau

Lankathas Pathmanathan

Ontario, Quebec மாகாணங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் மின்சாரத்தை இழந்தனர்

Leave a Comment