November 15, 2025
தேசியம்
செய்திகள்

அமெரிக்காவிடம் இருந்து கனடா 1.5 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்!

அமெரிக்காவிடம் இருந்து அடுத்த வாரம் கனடா 1.5 மில்லியன் COVID தடுப்பூசிகளை பெறவுள்ளது.

அமெரிக்காவுடனான தடுப்பூசி பகிர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று இந்த அறிவித்தல் வெளியானது. இதன் மூலம் அடுத்த வாரம் 1.5 மில்லியன்  AstraZeneca தடுப்பூசிகளை கனடா பெற்றுக் கொள்ளும் என கனடாவின் தடுப்பூசி விநியோகத்தை தலைமை தாங்கும் Major General Dany Fortin அறிவித்தார்.

கனடாவின் பொது சேவைகள்  மற்றும் கொள்முதல் அமைச்சு அமெரிக்காவுடன் இதற்கான இணக்கப்பாட்டை எட்டியது. இந்த நிலையில் March மாத இறுதிக்குள் கனடா 8 மில்லியன் தடுப்பூசிகளை பெறும் என்ற இலக்கு எட்டப்படும்  சாத்தியக்கூறு அதிகரித்துள்ளது. அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, எதிர்வரும் மாதங்களில் அமெரிக்காவுக்கு கனடா 1.5 மில்லியன் தடுப்பூசிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வாரம் கனடா 1.2 மில்லியன் Pfizer தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. April மற்றும் June மாதங்களுக்கு இடையில் ஒவ்வொரு வாரமும் சுமார் ஒரு மில்லியன் Pfizer தடுப்பூசிகளையும் கனடா எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது

Related posts

1973ஆம் ஆண்டின் பின்னர் 2020இல் மிகக் குறைந்த விவாகரத்துகள் கனடாவில் பதிவு

விடுப்பு எடுப்பதாக அறிவித்த மாகாண அமைச்சர்!

Lankathas Pathmanathan

கடந்த ஆண்டு Conservative கட்சி விளம்பரத்திற்கு $8.5 மில்லியன் செலவு

Lankathas Pathmanathan

Leave a Comment