தேசியம்
செய்திகள்

தொற்றை எதிர்கொள்ள கனடிய பொது சுகாதார நிறுவனம் தயாராக இருக்கவில்லை: கணக்காய்வாளர் நாயகம்!

ஒரு தொற்றை எதிர்கொள்ள கனடிய பொது சுகாதார நிறுவனம் தயாராக இருக் கவில்லை என கனடாவின் கணக்காய்வாளர் நாயகம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

COVID தொற்றின் கையாளுதல் குறித்த ஒரு கடினமான மதிப்பாய்வை  கனடாவின் கணக்காய்வாளர் நாயகம் Karen Hogan நேற்று வெளியிட்டார். COVID போன்ற ஒரு தொற்றின் ஆபத்தை பொது சுகாதார நிறுவனம் குறைத்து மதிப்பிட்டது எனவும் அவர் வெளியிட்ட தனது அறிக்கையில் கூறினார்.

ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக எச்சரிக்கைகள், திட்டமிடல், அரசாங்க நிதி ஒதுக்கீடு இருந்த போதிலும் கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்த உலகளாவிய தொற்று நோய்க்கு தயாராக இருக்கவில்லை எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார். இந்த தொற்றின் ஆரம்ப கட்டங்களில் அது முன்வைத்த அச்சுறுத்தலை பொது சுகாதார நிறுவனம் குறைத்து மதிப்பிட்டதாகவும் கணக்காய்வாளர் நாயகம் கூறினார் .

Related posts

கனடாவுடன் தொடர்புடைய 1,250 பேர் ஆப்கானிஸ்தானில் கைவிடப்பட்டுள்ளனர்!

Gaya Raja

காசாவில் நிலையான போர் நிறுத்தத்திற்கு கனடிய  பிரதமர் அழைப்பு

Lankathas Pathmanathan

ஒரு மாதத்தில் அதிக தொற்றுக்களை Ontario பதிவு செய்தது!

Gaya Raja

Leave a Comment