September 30, 2026
தேசியம்
செய்திகள்

Ontario Liberal தலைவர் தோல்வி!

Ontario மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட Ontario Liberal தலைவர் Bonnie Crombie தோல்வியடைந்தார்.

இந்தத் தேர்தலில் அவர் Mississauga East-Cooksville தொகுதியில் போட்டியிட்டிருந்தார்.

அவர் இந்தத் தொகுதியை வெற்றி பெறத் தவறினார்.

இந்தத் தொகுதியில் Progressive Conservative  கட்சியின் வேட்பாளர் Sylvia Gualtieri வேற்றிபெற்றார்.

இவர் Brampton நகர முதல்வர் Patrick Brownனின் மாமியார் ஆவார்.

தேர்தலில் தோல்வியடைந்தாலும் தொடர்ந்தும் கட்சியின் தலைவராக இருக்க Bonnie Crombie உறுதியளித்தார்.

2022 ஆம் ஆண்டு தேர்தலை விட இம்முறை Liberal கட்சி அதிக எண்ணிக்கையில் ஆசனங்களை வெற்றி பெற்றது.

ஆனாலும் மாகாணசபையில் கட்சியின் தலைவருக்கு ஒரு ஆசனம் இல்லாத நிலை Liberal கட்சிக்கு தொடர்கிறது.

Related posts

கனடாவிற்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி?

Lankathas Pathmanathan

COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

மாணவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் வகுப்பு கற்றலுக்குத் திரும்புவார்கள்: British Colombia

Lankathas Pathmanathan

Leave a Comment