தேசியம்
செய்திகள்

Toronto நகரசபையினால் தமிழ்ச் சமூக மையத்திற்கான அமைவிடம் குறித்த அறிவிப்பு!

Torontoவில் தமிழர் சமூக மையம் அமைவதற்கான இடம் குறித்த பரிந்துரை ஒன்று Toronto நகரவாக்கச் சபையினால் (Create TO) Toronto நகரசபைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை (29) Toronto தமிழர் சமூக மைய முன்னெடுப்புக் குழு இந்த தகவலை ஒரு ஊடக செய்திக் குறிப்பில் பகிர்ந்து கொண்டுள்ளது.

Toronto நகரசபையின் நில ஆதனப் பகுதியின் (City of Toronto’s real estate division), Toronto நகரவாக்கச் சபை, 311 Staines வீதியில் அமைந்துள்ள நிலத்தை எதிர்காலத்தில் தமிழ் சமூக மையம் அமைவதற்கான இடமாக நகரசபைக்குப் பரிந்துரைத்துள்ளது. இந்த நிலம் அண்ணளவாக 16,722 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டதாகும்.

Toronto நகரவாக்கச் சபை இந்த பரிந்துரையை இன்று நகரசபையின் உபகுழுவிற்குச் சமர்ப்பித்துள்ளது. இது Toronto நகரசபை உபகுழுவினால் October 5ம் திகதியும், Toronto நகர சபையினால் October 27ம் திகதியும் அங்கீகாரத்துக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Related posts

கனடிய செய்திகள் – November மாதம் 02 ஆம் திகதி திங்கள்கிழமை

Lankathas Pathmanathan

கனடாவின் நிதி நிறுவனங்கள் பாதுகாப்பாக உள்ளன – நிதி அமைச்சர் உறுதி

இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து நாடு கடத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!