கனடிய இறக்குமதிகள் மீது சனிக்கிழமை (01) முதல் 25 சதவீத வரி விதிக்க அமெரிக்கா ஜனாதிபதி Donald Trump முடிவு செய்துள்ளார்.
வெள்ளை மாளிகைப் பேச்சாளர் Karoline Leavitt இதனை உறுதிப்படுத்தினார்.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump சனிக்கிழமை கனடிய இறக்குமதிகள் மீது 25 சதவீத வரியை அமுல்படுத்துவார் என அவரது தலைமை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
March 1 வரை ஜனாதிபதி வரி விதிப்புகளை தாமதப்படுத்துவார் என வெளியான செய்திகள் தவறானது எனவும் Karoline Leavitt செய்தியாளர்களுடன் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.
அமெரிக்கா இந்த நடவடிக்கையை முன்னெடுத்தால் கனடா பதிலடி நடவடிக்கையாக வரி விதிப்புகளை முன்வைக்கும் என கனடிய பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை காலை (31) தெரிவித்திருந்தார்.
பிரதமரின் இந்த அறிவித்தல் குறித்து அமெரிக்கா ஜனாதிபதி உரிய நேரத்தில் பதிலளிப்பார் என வெள்ளை மாளிகைப் பேச்சாளர் மேலும் கூறினார்.
இதுபோன்ற கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவிப்பதற்கு முன்னர் Justin Trudeau ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுவது புத்திசாலித்தனமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
Donald Trump நிர்வாகத்திடமிருந்து இந்த வரி விதிப்பு காலக்கெடு குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலை கனடிய மத்திய அரசு இதுவரை பெறவில்லை என கனடிய அரசின் மூத்த அதிகாரிகள் கூறினர்.