September 28, 2026
தேசியம்
செய்திகள்

கனடா முழுவதும் நினைவு தினம்

முன்னாள் இராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில் கனடா முழுவதும் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

November 11ஆம் திகதி கனடாவில் நினைவு – Remembrance – தினமாகும்.

தலைநகர் Ottawaவில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் நடைபெற்ற நினைவு தின நிகழ்வில் பிரதமர், ஆளுநர் நாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

நினைவு தினத்தில் தேசத்திற்கு சேவை செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஒரு பாரம்பரியம் மட்டுமல்ல, ஒரு கடமையும் என பிரதமர் Justin Trudeau கூறினார்.

கனடிய படைகளில் இன்றும் தொடர்ந்து சேவையாற்றும் ஆயுதப் படைகளின் உறுப்பினர்களுக்கும் இந்த விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தற்போதைய ஓய்வு பெற்ற கனடிய போர் வீரர்களின் எண்ணிக்கை 7,300 பேர் என படைவீரர் விவகார அமைச்சு – Veterans Affairs கனடா – மதிப்பிடுகிறது.

 

Related posts

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரத்தில் கனடிய அரசின் தலையீட்டை வலியுறுத்தும் CTC

Lankathas Pathmanathan

மாகாணசபை உறுப்பினர்களான மூன்று Toronto நகர சபை உறுப்பினர்கள்

Lankathas Pathmanathan

வர்த்தக ஒப்பந்த முன்மொழிவு விவரங்களை வெளியிட Conservative கட்சி வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment