தேசியம்
செய்திகள்

இரண்டு நாடாளுமன்ற இடைத் தேர்தல் திகதி அறிவிப்பு

வெற்றிடமாக உள்ள Manitoba, Quebec நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிக்கான
இடைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான இரண்டு இடைத் தேர்தல்கள் September 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பிரதமர் Justin Trudeau ஒரு அறிக்கையில் இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

Winnipegகில் உள்ள Elmwood-Transcona  தொகுதியிலும், Montrealலில் உள்ள LaSalle – Émard – Verdun தொகுதியிலும் இந்த இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன.

NDP நாடாளுமன்ற உறுப்பினர் Daniel Blaikie, முன்னாள் நீதி அமைச்சர் David Lametti தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய நிலையில் இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த June மாதம் Toronto-St.Paul தொகுதியில் Liberal அரசாங்கம் எதிர்கொண்ட அதிர்ச்சிகரமான தோல்விக்குப் பின்னர் இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

Related posts

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் Michael Thompson குற்றவாளி அல்ல!

Lankathas Pathmanathan

இன்று Ontario மாகாணத்தின் வரவு செலவுத் திட்டம்

Lankathas Pathmanathan

55 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி வழங்கலை நிறுத்த NACI பரிந்துரை

Gaya Raja

Leave a Comment