தேசியம்
செய்திகள்

Durham காவல்துறை அதிகாரிகள் இருவர் காயம்

Pickering நகர காவல் நிலைய காவல் துறை அதிகாரிகள் இருவர் காயமடைந்த சம்பவம் சனிக்கிழமை நிகழ்ந்தது.

Pickering நகர காவல் நிலையத்திற்குள் ஆயுதத்துடன் நுழைந்த ஒருவருடன் நடந்த மோதலில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்

சனி மாலை 4:30 மணியளவில் Kingston வீதியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் அந்த நபர் நுழைந்ததாக Durham  பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபருக்கும் இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே நடந்த மோதலின் விளைவாக ஆண் காவலில் வைக்கப்பட்டார்,

சந்தேக நபர் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனாலும் அவரது காயங்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

இதில் இரண்டு அதிகாரிகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர் ஏன் காவல் நிலையத்திற்கு சென்றார் என்ற விபரம் வெளியாகவில்லை,

இந்த நிலையில் குறிப்பிட்ட சம்பவத்தைத் தொடர்ந்து காவல் நிலையம் மூடப்பட்டது.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.

Related posts

Stanley Cup: Winnipeg Jets அணி வெளியேற்றம்

Lankathas Pathmanathan

ஹமாஸ் தாக்குதலில் கனடியர் பலி

Lankathas Pathmanathan

Conservative கட்சி தலைவரின் எதிர்காலம் குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன

Lankathas Pathmanathan

Leave a Comment