தேசியம்
செய்திகள்

மீண்டும் குறைந்தது வட்டி விகிதம்

கனடிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை மீண்டும் குறைத்தது.

தொடர்ந்து இரண்டாவது முறையாக வட்டி விகிதத்தை குறைப்பதாக மத்திய வங்கி அறிவித்தது.

மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

இந்த அறிவித்தல் மூலம் மத்திய வங்கியின் வட்டி விகிதம் 4.5 சதவீதமாக குறைந்தது.

இதன் மூலம், June 2023 முதல் காணப்படாத நிலைக்கு  வட்டி விகிதம் திரும்புகிறது.

கடந்த மாதம் வட்டி விகிதத்தை 5 சதவீதத்தில் இருந்து 4.75 சதவீதமாக குறைத்தது.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட முதலாவது வட்டி விகித குறைப்பு இதுவாகும்.

பணவீக்கம் தொடர்ந்து குறையும் பட்சத்தில் வட்டி விகிதம் மீண்டும் குறையும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக மத்திய வங்கி, புதன்கிழமை அறிவித்தது.

March  2022 இல் கனடிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை அதிகரிக்க ஆரம்பித்ததில் இருந்து பணவீக்கம் குறைந்துள்ளது.

Related posts

Ontario சட்டமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு!

Gaya Raja

கடந்த ஆண்டு Conservative கட்சி விளம்பரத்திற்கு $8.5 மில்லியன் செலவு

Lankathas Pathmanathan

அனுமதி மறுக்கப்பட்ட ரஷ்ய பிரஜைகள் கனடாவுக்குள் நுழைவதை தடை செய்ய நடவடிக்கை

Leave a Comment