தேசியம்
செய்திகள்

காசா எல்லைக்கு அருகில் கனடியர் சுட்டுக் கொலை

காசா எல்லைக்கு அருகே கனடியர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இவர் இஸ்ரேலிய படையினரை கத்தியைக் காட்டி மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

காசா எல்லையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரை கத்தியைக் காட்டி மிரட்டிய கனடியர் ஒருவர் திங்கட்கிழமை (22) கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் எல்லைக்கு அருகில் உள்ள நகரத்தின் நுழைவாயிலுக்கு வாகனத்தை ஓட்டிச் சென்ற அவர், கத்தியுடன் பாதுகாப்புப் படையினரை அணுகினார் என இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த நபரைக் கொன்றனர்.

இந்தச் சம்பவத்தில் வேறு எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இதில் பலியானவர் குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Related posts

சீன அதிபர் கனடிய பிரதமர் மீது குற்றச் சாட்டு!

Lankathas Pathmanathan

 Ottawa காவல்துறைத் தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்கள் துன்புறுத்தப் படவில்லை: சீனா தூதர்!

Gaya Raja

Leave a Comment