September 14, 2026
தேசியம்
செய்திகள்

UP Express புகையிரதம் மோதியதில் 2 பேர் பலி

UP Express புகையிரதம் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

Toronto நகரின் மேற்கு பகுதியில் திங்கட்கிழமை மாலை UP Express புகையிரதம் மோதியதில் ஒரு ஆணும் பெண்ணும் இறந்துள்ளனர்.

Weston Road and Eglinton Avenue West பகுதியில் இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஒருவரை புகையிரதம் மோதியதாக சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட அவசர உதவி பிரிவினர் இரண்டாவது நபரை கண்டுபிடித்தனர்.

இரண்டு நபர்களும் சம்பவ இடத்தில்  இறந்து விட்டதாக காவல்துறையினர் அறிவித்தனர்.

இந்த சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைத் தீர்மானிக்க வில்லை எனவும் ஆரம்ப விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தமிழர் போட்டியிடும் இடைத் தேர்தல் வாக்களிப்பு வியாழக்கிழமை

Lankathas Pathmanathan

நம்பிக்கை ஒப்பந்தத்திற்கான முதல் முக்கியமான தருணம் வரவு செலவு திட்டம்: NDP

Lankathas Pathmanathan

Rafah தாக்குதல்கள் குறித்து கனடிய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan

Leave a Comment