தேசியம்
செய்திகள்

நான்கு மாகாணங்களில் பதினேழு தட்டம்மை நோயாளர்கள்!

கனடாவில் நான்கு மாகாணங்கள் தட்டம்மை – measles – நோயை உறுதிப்படுத்துகின்றன.

Quebec, Ontario, Saskatchewan, British Columbia ஆகிய மாகாணங்களில் பதினேழு தட்டம்மை நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இவற்றில் பாதிக்கும் அதிகமானவர்கள் Montreal நகரில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் Montreal தட்டம்மை நோயின் மையமாக மாறுகின்றது.

Quebec பொது சுகாதார இயக்குனர் Dr. Luc Boileau 10 நோயாளர்களை திங்கட்கிழமை உறுதிப்படுத்தினார்.

Ontario பொது சுகாதார மையம் ஐந்து தட்டம்மை நோயாளர்களை உறுதிப்படுத்தியது

இவர்களில் ஒருவர் உயர்நிலைப் பாடசாலை மாணவர் என தெரியவருகிறது.

அவர்கள் ஐவரில் ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும் பயணங்களுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது

British Columbiaவில் அடையாளம் காணப்பட்ட ஒருவர் சர்வதேச பயணத்துடன் தொடர்புடையவர் என மாகாண சுகாதார அதிகாரி Dr. Bonnie Henry கூறினார்.

Saskatchewanனில் January மாதம் நோய் உறுதிசெய்யப்பட்ட ஒருவரும் வெளிநாட்டுப் பயணத்துடன் தொடர்புடையவர் என தெரியவருகிறது.

Related posts

புற்றுநோய் சிகிச்சைக்காக அரசியலில் இருந்து விலகும் நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan

வாடகை மோசடி விசாரணையில் தமிழர் கைது

Lankathas Pathmanathan

Quebec மாகாணத்தில் இரு மொழி நிலையை தொடர்ந்து வைத்திருக்க நடவடிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment