தேசியம்
செய்திகள்

Durham இடைத் தேர்தலில் Conservative வெற்றி!

Durham தொகுதியின் இடைத் தேர்தலில் Jamil Jivani வெற்றி பெற்றார்.

Durham தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (04) நடைபெற்றது.

இந்த தேர்தலில் Conservative கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் Jamil Jivani வெற்றி பெற்றார்.

Conservative கட்சியின் முன்னாள் தலைவர் Erin O’Toole பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதியில் இந்த இடைத் தேர்தல் நடைபெற்றது.

இந்த இடைத் தேர்தலில் Robert Rock, Liberal கட்சியின் வேட்பாளராகவும், Chris Borgia NDP கட்சியின் வேட்பாளராகவும் போட்டியிட்டனர்.

தமிழர்கள் வாழும் Oshawa நகரின் ஒரு பகுதியை உள்ளடக்கிய Durham தொகுதி January 2004 முதல் Conservative கட்சியினால் பிரதிநிதித்துவ படுத்தப்படுகிறது.

August 2020 முதல் February 2022 வரை அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக Erin O’Toole பணியாற்றினார்.

2012ஆம் ஆண்டு முதன் முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் கடந்த இலைதுளிர் காலத்தில் தனது பதவியில் இருந்து விலகியிருந்தார்.

Related posts

B.C. – Alberta எல்லையில் உலங்கு வானூர்தி விபத்து: ஒருவர் பலி – இருவர் காயம்

Lankathas Pathmanathan

Ontario Liberal தலைமை பதவி போட்டியில் நான்காவது வேட்பாளர்

Lankathas Pathmanathan

தடுப்பூசி செயல்பாடுகளின் புதிய துணைத் தலைவராக Brigadier General Krista Brodie நியமனம்

Gaya Raja

Leave a Comment