British Columbia (BC) மாகாணத்தின் தேர்தலை முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற நேரடித் தொலைக்காட்சி விவாதம் புதன்கிழமை (14) நடைபெற்றது.
இதில் NDP கட்சித் தலைவர் David Eby, Conservative இடைக்காலத் தலைவர் Lorne Doerkson, பசுமைக் கட்சி தலைவர் Emily Lowan என மாகாணத்தின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இது இந்தத் தேர்தலுக்கான ஒரே ஒரு நேரடித் தொலைக்காட்சி விவாதமாகும்.
Angus Reid Institute தலைவர் Shachi Kurl இந்த விவாதத்தை நெறிப்படுத்தினார்.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த விவாதத்தில், மாகாணத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர்.
சுகாதாரத்துறை, பூர்வகுடி மக்கள் சட்டம், சமூக ஊடக சர்ச்சையும் விமர்சனங்களும் உள்ளிட்ட விடயங்கள் இந்த விவாதத்தின் முக்கிய அம்சங்களாக அமைந்தன.
October 24-ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தத் தலைவர்களின் நேரடி விவாதம் வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாகாணத்தின் முன்கூட்டிய வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை (16) முதல் 21 வரை நடைபெறவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
