தேசியம்
செய்திகள்

COVID தொற்று காரணமாக வேலை இழந்தவர்களுக்கான புதிய ஆதரவுத் திட்டங்கள் ஆரம்பிக்கின்றன

COVID பெரும் தொற்றின்  காரணமாக வேலை இழந்த கனடியர்கள் இன்று (திங்கள்) முதல் மத்திய அரசிடமிருந்து புதிய நிதி உதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Ontarioவிலும் Quebecகிலும் தொடரும் தொற்றின் அதிகரிப்புக்கு மத்தியில் வேலை இழப்புகளும் அதிகரிப்பது குறித்த கவலைகளுக்கு மத்தியில் அரசாங்கத்தின் புதிய நிதி உதவிகள் நடைமுறைக்கு வருகின்றன.

கனடா மீட்சிக் கொடுப்பனவு – Canada Recovery Benefit (CRB)

26 வாரங்களுக்கு வாரத்திற்கு  500 டொலர் செலுத்தும் புதிய கனடா மீட்சிக் கொடுப்பனவுக்கான (Canada Recovery Benefit (CRB) விண்ணப்பங்களை கனடிய வருமான வரித்  திணைக்களம் (Canada Revenue Agency) ஊடாக  பூர்த்தி செய்யலாம்.

சுய தொழில் புரிவோர் அல்லது வேலைக் காப்புறுதிக்குத் தகுதி பெறாத, ஆனால் வருமான உதவி தேவைப்படுவோருக்கு வாரமொன்றுக்கு 500 டொலர் வீதம் 26 வாரங்கள் வரை வழங்குகின்றது கனடா மீட்சிக் கொடுப்பனவு (Canada Recovery Benefit – CRB). இந்தக் கொடுப்பனவு, COVID காரணமாக வேலைக்குத் திரும்பாத அல்லது வருமானம் குறைந்தது 50 சதவீதம் குறைவடைந்த கனடியர்களுக்குக் கிடைக்கும். இந்தப் பணியாளர்கள் பணிக்குத் திரும்புவதற்கு தயாராக இருப்பதுடன், வேலை தேடும் முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும். அத்துடன், நியாயமான வேலையை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கனடா மீட்சிப் பராமரிப்பாளர் கொடுப்பனவு – Canada Recovery Caregiving Benefit – CRCB

COVID தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பதற்காக வேலையைத் தவறவிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கும் ஏனையவர்களுக்கும் கூடுதல் உதவிய வழங்கும், ஒரு புதிய பராமரிப்பாளர் நன்மைத் திட்டமும்  இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.

பாடசாலைகள், பகல்நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், அல்லது பராமரிப்பு நிலையங்கள் COVID  காரணமாக மூடப்பட்டிருப்பதால் அல்லது குழந்தையோ குடும்ப உறுப்பினரோ நோயுற்றமையாலோ தனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டியிருப்பதாலோ – 12 வயதிற்கு உட்பட்ட குழந்தை ஒன்றை அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரைப் பராமரிப்பதற்காக வேலைக்குச் செல்ல முடியாதிருப்போரில் தகுதி பெறும் கனடியர்களுக்கு, வீடொன்றுக்கு வாரமொன்றுக்கு 500 டொலர் வீதம் 26 வாரங்கள் வரை வழங்கும் கனடா மீட்சிப் பராமரிப்பாளர் கொடுப்பனவை (Canada Recovery Caregiving Benefit – CRCB) பெறலாம்.

கனடா மீட்சி சுகவீன கொடுப்பனவு – Canada Recovery Sickness Benefit -CRSB

COVID தொற்று காரணமாக சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டிய அல்லது  வேலை செய்ய முடியாதவர்களுக்கு வாரமொன்றுக்கு 500 டொலர் வீதம் இரண்டு வாரங்கள் வரை வழங்கும் புதிய மீட்சி சுகவீன கொடுப்பனவுத் திட்டத்தையும் அரசாங்கம் உருவாக்குகின்றது.

சுகவீனமுற்ற அல்லது COVID தொடர்புடைய காரணங்களுக்காக சுய தன்மைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டிய பணியாளர்களுக்கு வாரமொன்றுக்கு 500 டொலர் வீதம் இரண்டு வாரங்கள் வரை கனடா மீட்சி சுகவீன கொடுப்பனவு (Canada Recovery Sickness Benefit -CRSB) வழங்கும். கனடிய பணியாளர்கள் அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய சுகவீன விடுமுறை கிடைக்கவேண்டுமென்ற தமது உறுதிப்பாட்டுக்கு ஆதரவாக இந்தக் கொடுப்பனவு அமைவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தகுதிபெறும்  கனடியர்கள் கனடிய வருமான வரித்  திணைக்களம் ஊடாக CRB, CRSB, CRCB ஆகிய கொடுப்பனவுகளுக்கு இன்று (October 12, 2020) முதல் September 25, 2021 வரையான ஒரு வருட காலத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

Related posts

இஸ்ரேலில் அவசர தேவைகளை நிவர்த்தி செய்ய $10 மில்லியன் உதவி வழங்கும் கனடா

Lankathas Pathmanathan

காசாவில் மற்றொரு கனடிய பிரஜை காணாமல் போயுள்ளார்!

Lankathas Pathmanathan

தொழிற்சங்கத்துடன் தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியுள்ள Metro

Lankathas Pathmanathan

Leave a Comment