தேசியம்
செய்திகள்

ஹமாஸ் நடத்திய பாலியல் வன்முறைக்கு கனடிய வெளியுறவு அமைச்சர் கண்டனம்

இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது ஹமாஸ் நடத்திய பாலியல் வன்முறைக்கு கனடிய வெளியுறவு அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்

“பாலியல் வன்முறையை போர் தந்திரமாக பயன்படுத்துவது குற்றம்” என வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.

பாலியல், பாலின அடிப்படையிலான வன்முறைகளை கனடா வன்மையாகக் கண்டிக்கிறது எனவும்  அவர் கூறினார்.

ஹமாஸின் பாலியல் வன்முறையை கண்டிக்க எதிர்க்கட்சிகள் பல வாரங்களாக அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

பொதுவாக வன்முறைக்கு எதிராக பேசுவது மட்டும் போதாது என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்தனர்.

“ஹமாஸ் செய்த சித்திரவதை, கொலை, பாலியல் வன்முறைக்கு எந்த நியாயமும் இருக்க முடியாது” என October மாதம் நடந்த தனது கட்சியின் மாநாட்டில் NDP தலைவர் Jagmeet Singh கூறினார்.

ஹமாஸின் பாலியல் வன்முறையை கண்டிக்காத ஐக்கிய நாடுகள் சபையை கண்டிக்குமாறு ஆளும் Liberal அரசாங்கத்திற்கு Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Michelle Rempel Garner இரண்டு வாரங்களுக்கு முன்னர் அழைப்பு விடுத்தார்.

Related posts

60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு முதலாவது RSV தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்தது

Lankathas Pathmanathan

இந்த மாதம் மாத்திரம் கனடாவில் 20 மில்லியன் தடுப்பூசிகள்!

Gaya Raja

Ambassador பாலத்தில் தொடரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment