September 30, 2026
தேசியம்
செய்திகள்

நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சீன தூதர் கனடாவில் இருந்து வெளியேற்றம்

கனடிய அரசாங்கத்தினால் நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சீன தூதர் Zhao Wei கனடாவில் இருந்து வெளியேறியுள்ளார்.

Torontoவை தளமாகக் கொண்ட சீன தூதர் Zhao Weiயை வெளியேற்ற Liberal அரசாங்கம் கடந்த திங்கட்கிழமை முடிவு செய்தது.

Conservative நாடாளுமன்ற உறுப்பினரை மிரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டதாக சீன தூதர் Zhao Wei மீது  குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் Liberal அரசாங்கம் அவரை நாடு கடத்த முடிவு செய்த சில தினங்களில் Zhao Wei கனடாவை விட்டு வெளியேறி உள்ளதாக தெரியவருகிறது.

Zhao Wei வெள்ளிக்கிழமை (12) அதிகாரப்பூர்வமாக நாட்டை விட்டு வெளியேறினார் என அரசாங்க தரப்பு உறுதிப்படுத்தியது.

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Michael Chong, Hong Kongகில் உள்ள அவரது உறவினர்களை மிரட்டும் சதியில் Zhao Wei ஈடுபட்டதாக கனடாவின் உளவுத்துறை குற்றம் சாட்டியிருந்தது.

சீன தூதர் Zhao Weiயை வெளியேற்ற கனடிய அரசாங்கம் எடுத்த முடிவுக்கு பதிலளிக்கும் வகையில் கனேடிய தூதர் சீனாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

Shanghaiயில் உள்ள கனடாவின் துணைத் தூதரகத்தின் தூதரான Jennifer Lynn Lalonde சீனாவினால் செவ்வாய்க்கிழமை (09) வெளியேற்றப்பட்டார்.

13ஆம் திகதிக்கு முன்னதாக அவர் சீனாவில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

Related posts

அடுத்த ஆண்டு கனடா கடுமையானதும் தவிர்க்க முடியாததுமான மந்த நிலையை நோக்கிச் செல்லும்

Lankathas Pathmanathan

பிரதமருக்கான ஆதரவை தொடர்ந்து வெளிப்படுத்தும் அமைச்சர்கள்!

Lankathas Pathmanathan

கனடாவுக்குள் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களுக்கு இனி சுங்கவரிகள் இல்லை?

Lankathas Pathmanathan

Leave a Comment