தேசியம்
செய்திகள்

Quebec தொழிலதிபரின் மரணம் குறித்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் இருவர்

Dominicaவில் நிகழ்ந்த Quebec தொழிலதிபரின் மரணம் குறித்து இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது

Quebecகில் பிறந்த திரைப்பட தொழிலதிபர் 66 வயதான Daniel Langlois, அவரது துணை 58 வயதான Dominique Marchand ஆகியோர் Caribbean நாடான Dominicaவில் வெள்ளிக்கிழமை (01) சடலமாக மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில் இவர்கள் மரணம் தொடர்பாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Jonathan Lehrer, Robert Thomas Snider ஆகியோர் மீது இந்த குற்றச் சாட்டுகள் புதன்கிழமை (06) பதிவாகின.

இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

இவர்களுக்கு எதிரான முதற்கட்ட விசாரணை March மாதம் 15ஆம் திகதி நடைபெற உள்ளது.

இந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஏனைய இருவரும் குற்றச்சாட்டை எதிர்கொள்வார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்வதாக அதிகாரிகள் கூறினர்.

Related posts

COVID: கனடிய சுகாதார அதிகாரிகளின் புதிய எச்சரிக்கை

Lankathas Pathmanathan

தொடரும் கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Ontario மாகாண சபை அமர்வுகள் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பம்

Leave a Comment