September 28, 2026
தேசியம்
செய்திகள்

காவல்துறை அதிகாரிக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்த துப்பாக்கிதாரி

கடமையின் போது கொல்லப்பட்ட Toronto காவல்துறை அதிகாரியின் இறுதி சடங்கு எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

Mississauga நகரில் வார ஆரம்பத்தில் பணியின் போது கொல்லப்பட்ட 48 வயதான Const. Andrew Hongகின் இறுதிச் சடங்கு புதன்கிழமை மதியம் Toronto Congress Centreரில் நடைபெறும்.

வட அமெரிக்கா முழுவதிலும் இருந்து பல உயரதிகாரிகளும் காவல்துறை தலைவர்களும் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக காவல்துறை அதிகாரி ஒருவரை தேடி செலவிட்டார் என புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

40 வயதான Sean Petrie இந்த சம்பவத்தின் துப்பாக்கிதாரி என காவல்துறையினர் வியாழக்கிழமை (15) அடையாளம் காட்டினர்.

Related posts

கனடா COVID மந்தநிலையின் இறுதி கட்டத்தை எதிர்கொள்கிறது: துணை பிரதமர்

Lankathas Pathmanathan

கனடியர்களுக்கு செலுத்தப்படும் COVID தடுப்பூசிகள்

Lankathas Pathmanathan

கனடிய தமிழர் பேரவைக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment