தேசியம்
செய்திகள்

Ontarioவிலும் Quebecகிலும் இடியுடன் கூடிய மழை காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரிப்பு

இடியுடன் கூடிய மழையின் காரணமாக தெற்கு Ontarioவிலும் Quebecகின் சில பாகங்களிலும் பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்தது.

தெற்கு Ontarioவிலும் Quebecகிலும் சனிக்கிழமை (21) மதியம் இடியுடன் கூடிய பலத்த காற்று வீசியதில் பெரும் உடமை சேதங்களும் ஏற்பட்டன.

புயல் தாக்கிய சிறிது நேரத்துக்குப் பின்னர், Toronto பெரும்பாகம் முழுவதும் பல மின் தடைகள் அறிவிக்கப்பட்டன.

Brampton நகரில் மதியம் 1:30 மணியளவில் புயலில் நடந்து சென்ற பெண் மீது பெரிய மரம் ஒன்று வீழ்ந்த சம்பவம் நிகழ்ந்தது.

இதில் காயமடைந்து பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்ததாக Peel பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.

Cambridge அருகே Pinehurst Lake Conservation பகுதியில் மரம் விழுந்ததில் 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் கடுமையான உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளான ஒருவர் மரணமடைந்தார்.

ஏனைய இருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன.

Greater Madawaska பகுதியில் மரம் விழுந்ததில் 44 வயதான ஒருவர் மரணமடைந்ததாக Ontario மாகாண காவல்துறையினர் தெரிவித்தனர்.

Ottawa மேற்கில் கடுமையான காயங்களுக்கு உள்ளன ஒருவர் மரணமடைந்ததாக Ottawa காவல்துறையினர் தெரிவித்தனர்.

Ottawa ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 51 வயதுடைய பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக Gatineau காவல்துறையினர் தெரிவித்தனர்.

Hydro Quebec, Hydro Ottawa ஆகியன 170,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.

Ontarioவின் கிராமப்புற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மின்சாரம் வழங்கும் Hydro One, ஞாயிறுக்கிழமை (22) காலை 9:30 மணிவரை 269,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக அறிவித்தது.

Durham பிராந்தியத்தில், Uxbridge பண்ணைக் குடியிருப்பு பகுதி அவசரகால நிலையை அறிவித்தது.

இந்த பகுதியில் நீண்ட நேர மின்வெட்டுக்கு குடியிருப்பாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இரண்டு மாதங்களுக்கு $1.5 பில்லியன் உபரியாகப் பதிவானது

Lankathas Pathmanathan

பிரதமருக்கான ஆதரவை தொடர்ந்து வெளிப்படுத்தும் அமைச்சர்கள்!

Lankathas Pathmanathan

வைத்தியசாலை பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க பிரதமரிடம் NDP தலைவர் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment