தேசியம்
செய்திகள்

இடியுடன் கூடிய மழையின் காரணமாக தெற்கு Ontarioவில் மூவர் பலி

சனிக்கிழமை மதியம் ஏற்பட்ட இடியுடன் கூடிய மழையின் காரணமாக தெற்கு Ontarioவில் மூவர் கொல்லப்பட்டனர்.

May மாத நீண்ட வார இறுதியின் ஆரம்பத்தின் போது, ​​தெற்கு Ontario வில் ஒரு பெரிய இடியுடன் கூடிய பலத்த காற்று வீசியதில் பெரும் உடமை சேதங்களும் ஏற்பட்டன.

புயல் தாக்கிய சிறிது நேரத்துக்குப் பின்னர், Toronto பெரும்பாகம் முழுவதும் பல மின் தடைகள் அறிவிக்கப்பட்டன.

Brampton நகரில் மதியம் 1:30 மணியளவில் புயலில் நடந்து சென்ற பெண் மீது பெரிய மரம் ஒன்று வீழ்ந்த சம்பவம் நிகழ்ந்தது.

இதில் காயமடைந்து பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.

Cambridge அருகே Pinehurst Lake Conservation பகுதியில் மரம் விழுந்ததில் 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் கடுமையான உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளான ஒருவர் மரணமடைந்தார்.

ஏனைய இருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன.

Ottawa மேற்கில் கடுமையான காயங்களுக்கு உள்ளன ஒருவர் மரணமடைந்ததாக தெரியவருகிறது.

Hydro Quebec, Hydro Ottawa ஆகியன 100,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.

Ontarioவின் கிராமப்புற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மின்சாரம் வழங்கும் Hydro One, சனிக்கிழமை மாலை வரை 370,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக அறிவித்தது.

Durham பிராந்தியத்தில், Uxbridge பண்ணைக் குடியிருப்பு பகுதி அவசரகால நிலையை அறிவித்தது.

Related posts

தலைமை போட்டி இடை நிறுத்தப்பட்டால், கட்சியை விட்டு வெளியேறுவோம்: பசுமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடியர்களுக்கு முடிவுக்கு வரும் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள்

Gaya Raja

 November மாதத்தில் வீடு விற்பனை குறைந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment