தேசியம்
செய்திகள்

Torontoவில் முதலாவது monkeypox சந்தேக தொற்று குறித்த விசாரணை ஆரம்பம்

Torontoவில் முதலாவது monkeypox சந்தேக தொற்று குறித்து விசாரணை நடத்தி வருவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

சந்தேகத்திற்கிடமான தொற்று 40 வயதான ஒரு ஆணிடம் கண்டறியப்பட்டதாக சனிக்கிழமை (21) பிற்பகல் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் Toronto பொது சுகாதார பிரிவு தெரிவிக்கிறது.

இவர் Montrealலுக்குப் பயணித்த ஒரு நபருடன் சமீபத்தில் தொடர்பு கொண்டிருந்தார் என தெரியவருகின்றது.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர் குணமடைந்து வருவதாக கூறப்படுகின்றது.

தற்போதைய நிலையில் இந்த தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவு என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

Quebecகில் உள்ள சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மூன்று தொற்றுகளையும், அதற்கு ஒரு நாள் முன்னதாக இரண்டு தொற்றுகளையும் உறுதிப்படுத்திய நிலையில் Toronto தொற்று குறித்த அறிக்கை வெளியானது.

Quebec, British Columbia ஆகிய மாகாணங்களில் 20க்கும் அதிகமான சந்தேகத்திற்குரிய தொற்றுக்கள் குறித்து விசாரணைகள் தொடர்கின்றன.

Related posts

Nova Scotia பாடசாலைகளில் முக கவசங்கள் கட்டாயமாகின்றன!

Gaya Raja

வார இறுதியில் தெற்கு Ontarioவின் சில பகுதிகளில் 60 CM வரை பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

Patrick Brown நிதி திரட்டும் நிகழ்வு குறித்த அறிவிப்பை வழங்காது தவறு

Lankathas Pathmanathan

Leave a Comment