தேசியம்
செய்திகள்

முஸ்லிம் குடும்பம் மீதானது ஒரு பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் Trudeau

London Ontarioவில் முஸ்லிம் குடும்பம் ஒன்றின்  மீது வாகன சாரதி ஒருவர் மேற்கொண்டது ஒரு பயங்கரவாத தாக்குதல் என பிரதமர் Justin Trudeau கூறினார்.  

ஞாயிற்றுக்கிழமை நால்வர் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற அமர்வில் பிரதமர் உரையாற்றினார். நான்கு பேரின் உயிர்கள் ஒரு மிருகத்தனமான, கோழைத்தனமான, வெட்கக்கேடான வன்முறை செயலில் பறிக்கப்பட்டதாக பிரதமர் Trudeau தனதுரையில் குறிப்பிட்டார்.

இந்த அமர்வின் போது இந்த தாக்குதலை Conservative தலைவர் Erin O’Toole, NDP தலைவர் Jagmeet Singh, Bloc Quebecois தலைவர் Yves-Francois Blanchet, பசுமை கட்சியின் நாடாளுமன்ற தலைவி Elizabeth May ஆகியோர் தமது உரையின் மூலம் கண்டித்தனர்.

Related posts

வேலை வெற்றிடங்கள் முன்னெப்போதும் இல்லாத உயர்வை எட்டியது

Lankathas Pathmanathan

Ontario: புதிய சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி நியமனம்

Gaya Raja

Remembrance தினம் – கனடிய தேசிய கொடிகள் மீண்டும் அரைக் கம்பத்தில்: மத்திய அரசாங்கம்

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!