கனடாவின் முன்னாள் வதிவிட பாடசாலைகள் குறித்து போப்பாண்டவர் Francis மன்னிப்பு கோர வேண்டும் என்ற அழைப்பு கனடிய கத்தோலிக்க சமூகத் தலைவர்கள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது.
போப்பாண்டவர் கனடாவிற்கு வருகை தந்து வதிவிட பாடசாலைகளுக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கோர வேண்டும் என கத்தோலிக்க சமூகத் தலைவர்கள் தொடர்ந்து கோருகின்றனர். மன்னிப்புக்கு மேலதிகமாக, 2007 ஆம் ஆண்டில் வதிவிட பாடசாலைகளில் உயிர் பிழைத்தவர்கள் உடனான சட்ட தீர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்த 20 மில்லியன் டொலர் மறுசீரமைப்பை தேவாலயம் வழங்க வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
வதிவிட பாடசாலைகளுக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கோருமாறு கத்தோலிக்க திருச்சபையை கனடிய பிரதமர் Justin Trudeau கடந்த வாரம் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.