தேசியம்
செய்திகள்

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளையும் தனிமைப்படுத்தல் விதிகளையும் தளர்த்துவது சாத்தியம்: பிரதமர்

COVID தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளையும்  தனிமைப்படுத்தல் விதிகளையும் தளர்த்துவது சாத்தியம் என பிரதமர் Justin Trudeau கூறினார்.

அனைத்து கனேடியர்களும் மீண்டும் பயணங்களை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளனர் எனக் கூறிய பிரதமர், அதிக எண்ணிக்கையானவர்கள் இரண்டாவது தடுப்பூசியை பெறும் வரை பொறுமை தேவை எனவும் தெரிவித்தார். கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான மிகவும் பொருத்தமான நடவடிக்கைகளை மாகாணங்களுடன் அரசாங்கம் தொடர்ந்து ஆலோசிக்கும் எனவும் Trudeau மேலும் கூறினார்

அமெரிக்காவுடனான தற்போதைய அத்தியாவசியமற்ற  பயண கட்டுப்பாடுகள் இந்த மாதம் 21ஆம் திகதி அன்று காலாவதியாகிறது. இதேவேளை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு பயண பரிந்துரைகளை தளர்த்தியுள்ளது.

Related posts

சுகாதார பாதுகாப்பு நிதி உதவி குறித்த முதல்வர்கள் சந்திப்பு தாமதம்

Lankathas Pathmanathan

Quebec குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் பேரூந்து மோதியதில் இரண்டு குழந்தைகள் மரணம் – ஆறு பேர் காயம்

Lankathas Pathmanathan

பலமான அதிகாரங்கள் ஏனைய நகர முதல்வர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்: முதல்வர் Ford

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!