தேசியம்
செய்திகள்

COVID-19 தொற்றினால் நெடுந்தீவைச் சேர்ந்த பெண் கனடாவில் மரணம்

கொரோனா வைரஸ் காரணமாக கனடாவில் மற்றும் ஒரு தமிழர் மரணமடைந்துள்ளார்.

இலங்கையில் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்திலும் கனடாவில் Brampton நகரிலும் வசித்துவந்த திருமதி புஸ்பராணி நாகராஜா என்பவரே மரணமடைந்துள்ளார். 56 வயதான இவர் மூச்சுத் திணறலால் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (திங்கள்) மதியம் மரணமாகியுள்ளார். இவரது இறப்புக்கு, கொரனா வைரஸ் காரணமாக இருந்துள்ளதை மருத்துவ சாட்சிப்பத்திரம் உறுதிப்படுத்தியுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இவரது கணவனும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக Brampton வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது சுய நினைவு அற்ற நிலையில் உள்ளதாக தெரியவருகின்றது. இவர்களது மூன்று பெண் பிள்ளைகளும் தமது இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்ற கனடா

Lankathas Pathmanathan

மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

பச்சை மண்டலத்துக்கு செல்லும் Quebec!

Gaya Raja

Leave a Comment