தேசியம்
செய்திகள்

COVID-19 தொற்றினால் நெடுந்தீவைச் சேர்ந்த பெண் கனடாவில் மரணம்

கொரோனா வைரஸ் காரணமாக கனடாவில் மற்றும் ஒரு தமிழர் மரணமடைந்துள்ளார்.

இலங்கையில் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்திலும் கனடாவில் Brampton நகரிலும் வசித்துவந்த திருமதி புஸ்பராணி நாகராஜா என்பவரே மரணமடைந்துள்ளார். 56 வயதான இவர் மூச்சுத் திணறலால் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (திங்கள்) மதியம் மரணமாகியுள்ளார். இவரது இறப்புக்கு, கொரனா வைரஸ் காரணமாக இருந்துள்ளதை மருத்துவ சாட்சிப்பத்திரம் உறுதிப்படுத்தியுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இவரது கணவனும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக Brampton வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது சுய நினைவு அற்ற நிலையில் உள்ளதாக தெரியவருகின்றது. இவர்களது மூன்று பெண் பிள்ளைகளும் தமது இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

சில மாகாணங்கள் COVID தொற்றின் PCR சோதனை பின்னடைவை எதிர்கொள்கின்றன

Lankathas Pathmanathan

கனடாவில் 42 மில்லியன் பேர் தடுப்பூசி பெற்றனர்!

Gaya Raja

கனேடிய சீக்கிய தலைவர் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு உள்ளதாக Trudeau குற்றச் சாட்டு

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!