November 28, 2026
தேசியம்
செய்திகள்

Bill 21 சட்டத்தை “சட்டப்பூர்வ இனவெறி” என்ற Manitoba முதல்வர்: கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற Quebec முதல்வர் எச்சரிக்கை!

Bill 21 சட்டத்தை “சட்டப்பூர்வ இனவெறி” என விமர்சித்த Manitoba முதல்வரின் கருத்தை திரும்பப் பெற வேண்டும் என Quebec முதல்வர் வலியுறுத்தினார்.

Quebec மாகாணத்தின் மதச்சார்பின்மை சட்டமான Bill 21 குறித்துக் கனடிய உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (27) தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை தொடர்ந்து கருத்து கூறிய Manitoba முதல்வர் Wab Kinew இச்சட்டத்தை “சட்டப்பூர்வ இனவெறி”  என விமர்சித்தார்.

இந்த விமர்சனத்திற்கு Quebec முதல்வர் Paul St-Pierre Plamondon கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், Wab Kinew தனது கருத்துக்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உச்ச நீதிமன்றம் Bill 21 சட்டத்தை உறுதி செய்ததை தொடர்ந்து வெள்ளியன்று செய்தியாளர்களிடம் பேசிய Wab Kinew, இச்சட்டம் முதன்மையாக இஸ்லாமியர்களையும், சீக்கியர்கள், ஏனைய மத சிறுபான்மையினரையும் பாகுபடுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டினார்.

இதற்குச் சமூக வலைதளத்தில் பதிலளித்த Paul St-Pierre Plamondon, இந்தச் சட்டத்தை ‘சட்டப்பூர்வ இனவெறி’ என Wab Kinew வர்ணித்ததை வன்மையாகக் கண்டித்தார்.

Quebec குறித்த தனது அவமரியாதையான, சகிப்புத்தன்மையற்ற கருத்துக்களுக்காக Wab Kinew வெட்கப்பட வேண்டும் எனவும் கூறிய Paul St-Pierre Plamondon, அவர் அவற்றை திரும்ப பெற வேண்டும் என சனிக்கிழமை (28) கோரினார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு Quebec மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றி என்றாலும், மாகாணங்களின் சுயாட்சிக்கு இது ஒரு பின்னடைவு என Paul St-Pierre Plamondon தெரிவித்தார்

எதிர்வரும் 7, 8 ஆம் திகதிகளில் Toronto-வில் நடைபெற உள்ள ஏனைய மாகாண முதல்வர்களுடனான சந்திப்பில் இந்த விவகாரத்தை எழுப்பவுள்ளதாக  Paul St-Pierre Plamondon கூறியுள்ளார்.

Related posts

மனநலம் பாதித்தவர்களுக்கு கருணைக் கொலை சலுகை இல்லை: நீதி அமைச்சர் Sean Fraser

Lankathas Pathmanathan

கனேடிய எல்லையில் PCR சோதனை தேவை -தலைமை பொது சுகாதார அதிகாரி

Gaya Raja

புதிய குடிவரவுத் திட்டங்களை வெளியிடுகிறது Liberal அரசு!

Lankathas Pathmanathan

Leave a Comment