கனடிய அரசாங்கத்தின் புதிய குடிவரவு திட்டங்கள் இந்த வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mark Carney அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் வியாழக்கிழமை (05) சமர்ப்பிக்கப்படுகிறது.
இந்த ஒரு பகுதியாக கனடிய அரசாங்கத்தின் புதிய குடிவரவு திட்டங்களும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், கனடாவின் புதிய குடிவரவு திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என அரசு தரப்பு தரவுகளை மூலம் தெரியவருகிறது.
இந்த நிதிநிலை அறிக்கை, Mark Carney அரசாங்கத்தின் எதிர்காலப் பொருளாதாரக் கொள்கைகளை தீர்மானிப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
