November 28, 2026
தேசியம்
செய்திகள்

Bill C-39 சட்டமூலத்தில் அரசாங்கத்திற்கு ஆதாரமாக வாக்களிக்க கட்சி உறுப்பினர்களுக்கு பிரதமர் உத்தரவு!

Bill C-39 மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் Liberal கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சித் தலைமையின் உத்தரவின்படி கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனப் பிரதமர் Mark Carney அறிவித்துள்ளார்.

கட்சித் தலைமையின் உத்தரவு இல்லாமல் இந்த சட்டமூலம் எளிதில் நிறைவேறும் என அரசாங்க சபை தலைவர் Steven MacKinnon வியாழக்கிழமை (26) நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ஆனாலும் மறுதினம் வெள்ளிக்கிழமை (27) செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், இதில் Liberal கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சித் தலைமையின் உத்தரவின்படி வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை வெளியிட்டுள்ளார்.

இந்த சட்டமூலத்தை Liberal கட்சியின் மிக முக்கியமான பொருளாதாரச் சட்டம் என வர்ணித்த பிரதமர்,கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒரு அரசாங்கமாக இணைந்து இதில் வாக்களிப்போம் என திட்டவட்டமாக கூறினார்.

இந்த சட்டமூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை பலவீனப்படுத்துவதாகவும், பூர்வீகக் குடியினர் உரிமைகளை மீறுவதாகவும், தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமையைக் கட்டுப்படுத்துவதாகவும் கூறி அனைத்து எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதில் முக்கிய திருத்தங்களை Liberal அரசு ஏற்க மறுத்ததால், தமது கட்சி இச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கும் எனக் Conservative கடசித் தலைவர் Pierre Poilievre வியாழக்கிழமை அறிவித்தார்.

எதிர்க்கட்சிகள் ஆதரவு இல்லாத நிலையில், நாடாளுமன்றத்தில் 173 இடங்களுடன் நூலிழை பெரும்பான்மையைக் கொண்டுள்ள Liberal அரசுக்கு, இச்சட்டமூலத்தை நிறைவேற்றத் தமது கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளும் கட்டாயம் அவசியமானது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontario அரசின் காசோலைகள் விரைவில் அனுப்பப்படும்

Lankathas Pathmanathan

கனடாவில் அதிகரிக்கும் குழு வன்முறை தொடர்பான மரணங்கள்

Lankathas Pathmanathan

கனடாவில் ஏழு தொகுதிகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள் தேர்தல்!

Lankathas Pathmanathan

Leave a Comment