November 27, 2026
தேசியம்
செய்திகள்

உலகப் பொருளாதார அதிர்ச்சிகள் இனி அடிக்கடி நிகழும்: கனடிய மத்திய வங்கி ஆளுநர் Tiff Macklem கடும் எச்சரிக்கை!

உலகளாவிய வர்த்தக மோதல்கள், போர்ச் சூழல்களுக்கு மத்தியில், உலகப் பொருளாதார அதிர்ச்சிகள் இனி மிகப் பெரியதாகவும் அடிக்கடி நிகழ கூடியதாகவும் இருக்கும் என கனடிய மத்திய வங்கியின் ஆளுநர்  எச்சரித்துள்ளார்.

Toronto-வில் நடைபெற்ற Economic Club of கனடா நிகழ்வில் உரையாற்றிய  கனடிய வங்கி ஆளுநர் Tiff Macklem இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

பெருந்தொற்றுக்கு பின்னர் ஏற்பட்டதைப் போன்ற கடுமையான விலைவாசி உயர்வை தடுக்க 2 சதவீதப் பணவீக்க இலக்கில் மத்திய வங்கி உறுதியாக இருப்பதாகவும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

2022 முதல் 2024 வரையிலான வட்டி உயர்வுகள் மூலம் 2 சதவீதத்திற்கும் கீழ் கொண்டுவரப்பட்ட பணவீக்கம், தற்போது மீண்டும் சுமார் 3 சதவீதமாக உயர்ந்துள்ளதை Tiff Macklem  சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கான பிரதான காரணியாக ஈரான் யுத்தமும் அமெரிக்க வர்த்தக மோதலும், தீவிர வானிலை மாற்றங்களும், செயற்கை நுண்ணறிவும், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமாக மாற்றங்களை அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் கனடிய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை கால் சதவீதம் உயர்த்தி 2.5 சதவீதமாக நிர்ணயித்தது.

மேலும் 2027-ம் ஆண்டில் பணவீக்கம் 3.1 சதவீதத்தை எட்டும் எனவும் மத்திய வங்கி கணித்திருந்தது.

October மாதத்தின் பின்னர் எண்ணெய் விலைகள் சற்று குறைந்திருந்தாலும், பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட அதிக மீள் தன்மையுடன் இருப்பதாக Tiff Macklem கூறியுள்ளார்.

ஆளுநரின் இந்தக் கருத்துக்கள் அடுத்த மாதம் மீண்டும் ஒரு வட்டி விகித அதிகரிப்பு இருக்கும் என்பதையே உறுதிப்படுத்துவதாக பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

Related posts

வெள்ள நிவாரணத்திற்கு கனடிய அரசங்கம் இதுவரை $2 மில்லியன் நிதி உதவி

Lankathas Pathmanathan

2024 Stampede நிகழ்வில் காயமடைந்த மூன்று விலங்குகள் கருணைக் கொலை

Lankathas Pathmanathan

காட்டுத் தீயால் ஏற்பட்ட சுவாச தொல்லை காரணமாக 9 வயது சிறுவன் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment