கனடா புதிய இறக்குமதி வரிகளை விதிப்பதாக அறிவித்துள்ளது;
பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் மீது இறக்குமதி வரம்புகள், கூடுதல் வரிகளை கனடிய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் இந்த வரி அறிவித்தல் வெளியானது.
கனடிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
உள்நாட்டு விவசாயம், உணவு உற்பத்தித் துறையை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை Mark Carney அரசாங்கம் எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில பதப்படுத்தப்பட்ட காய்கறிகளுக்கு கனடிய அரசாங்கம் இறக்குமதி உச்சவரம்பையும், நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டும் இறக்குமதிகளுக்கு புதிய வரிகளையும் விதித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து அதிகரித்து வரும் பதப்படுத்தப்பட்ட காய்கறி இறக்குமதிகள் கனடிய உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாக கனடியச் சர்வதேச வர்த்தக தீர்ப்பாயம் கண்டறிந்ததை தொடர்ந்து, அத்தகைய பொருட்கள் மீது மத்திய அரசு இறக்குமதி உச்சவரம்புகளையும் கூடுதல் வரிகளையும் விதித்துள்ளது.
இதில் முதல் ஆண்டிற்கு 1,30,00,000 KG இறக்குமதி ஒதுக்கீட்டு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வரம்பிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரி விதிக்கப்படாது எனவும் ஆனால் இந்த வரம்பைத் தாண்டும் இறக்குமதிகளுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த இறக்குமதி ஒதுக்கீட்டு அளவு படிப்படியாக 1,35,00,000 KG-விற்கு சற்று அதிகமாக உயர்த்தப்படும் எனவும் அதே சமயம், உச்சவரம்புக்கு மேற்பட்ட இறக்குமதிகளுக்கான வரி விகிதம் 40 சதவீதமாக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரி விகித ஒதுக்கீடு எதிர்வரும் December 1, 2026 முதல் June 17, 2029 வரை அமுலில் இருக்கும் என தெரியவருகிறது.
Mexico, Chile, Israel, Colombia, Korea, Panama, Peru உட்பட சில வளரும் நாடுகளைத் தவிர, உலகின் ஏனைய அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் இறக்குமதிகளுக்கு இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் (EU), தாய்லாந்து ஆகிய நாடுகளின் இறக்குமதிகளுக்கு இந்த ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட பங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் குறிப்பிட்ட சில பதப்படுத்தப்பட்ட காய்கறிகளுக்கு விலக்கு கோருவதற்கான விண்ணப்ப நடைமுறையைத் தொடங்குமாறு தீர்ப்பாயத்திற்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
